என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகையிலை பறிமுதல்"
- புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- 3 பேரை கைது செய்த போலீசார் கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் 1,250 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் செங்கோட்டையை சேர்ந்த செண்பகராஜன் (31), சாத்தான்குளம் அருகே உள்ள கீழ செட்டிக்குளத்தை சேர்ந்த அஜய்சதீஷ் (24), கிருபாகரன் (35) என்பதும், அவர்கள் கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செண்பகராஜன் செங்கோட்டை நகராட்சியின் கவுன்சிலர் ஆவார்.
- குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- குட்கா, புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் தலைமையிலான போலீசார் களியல் ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டிரக்கரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 56 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் களியல் பகுதியை சேர்ந்த அருள் தாஸ் (வயது 48), சிதறால் பகுதியை சேர்ந்த எட்வின் (37) என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்கா, புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
- வியாபாரி மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் அவரை ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று திருகண்டலம் ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் செல்லப்பா(வயது58) என்பது தெரியவந்தது. இவர் தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.
எனவே, அவர் பையில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்களுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
- போடி டி.வி. கே.கே.நகரில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி டி.வி. கே.கே.நகரில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போடி டவுன் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது காளியம்மன் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் கிருஷ்ணராஜா என்பவர் தனது வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
போலீசாரைக் கண்டதும் கிருஷ்ணராஜா தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- போலீசார் 3 பேரையும் கைது செய்ததோடு, காரில் இருந்த 282 கிலோ குட்காவுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் தாளமுத்துநகர் அருகே பாக்கியநாதன்பிளையை சேர்ந்த போவாஸ்(வயது 33), இந்திராநகரை சேர்ந்த ராஜேஷ்(40), கீழஅழகாபுரியை சேர்ந்த முத்துக்குமார்(30) என்பதும், காரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. மேலும் இதில் பாக்கியநாதன்பிள்ளையை சேர்ந்த எபனேசனர்(31), எலியாஸ்(32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு, காரில் இருந்த 282 கிலோ குட்காவுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகிறார்.
- வீட்டில் குட்கா, புகையிலையை பதுக்கி வைத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
- மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் வடக்கு மலையடிபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முனிசிபல் காலனியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் தனது வீட்டில் குட்கா, புகையிலையை பதுக்கி வைத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- சரக்கு வாகனத்தில் கடத்திய 18 மூட்டைகளில் பதப்படுத்திய 420 கிலோ துண்டு புகையிலை மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியனுக்கு சரக்கு வாகனத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், முருகன், சரவணன் ஆகியோர் மேற்கு தாலுகா அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனத்தில் இருந்த 18 மூட்டைகளில் பதப்படுத்திய 420 கிலோ துண்டு புகையிலை மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.
- மேலும் 18 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர்ப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி லாரன்ஸ் அண்ணாசாலை, நாயுடுபுரம், கலையரங்கம் பகுதி, ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆனந்தகிரி 2-வது தெருப் பகுதியில் ஹசன் என்பவர் நீண்ட நாட்களாக கருவாடு விற்பதுபோல் கருவாடு பார்சலோடு புகையிலை பாக்கெட்டுகளையும் மறைத்து வாங்கி வந்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புகையிலை சுமார் 18 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லாரன்ஸ் போலீசாருடன் சென்று அவற்றை பறிமுதல் செய்தார்.
விற்பனையில் ஈடுபட முயன்ற ஹசன் என்பவருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப்பாக்கெட்டுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விற்பனையில் ஈடுபட முயன்ற நபர் மீது நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் நகர் பகுதிக்குள் ஒரு வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் தென்காசி பஜாரில் உள்ள அரசமரத்தடி அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினிலோடு ஆட்டோவை தடுத்துநிறுத்தினர். அதில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
போலீசார் அவர்களை துரத்தி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மினிலோடு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
சுமார் 700 கிலோ எடை கொண்ட புகையிலையை போலீசார் லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் ராஜஸ்தான் மாநிலம் சபரி புரத்தை சேர்ந்த பிரதாப்படேல் (வயது 35) மற்றும் ரமேஷ் படேல் (19) ஆகியோர் என்பதும், 2 பேரும் தென்காசி அணைக்கரை தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், 2 பேரையும் கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்